(இது என் முதல் தமிழ் கதை பதிவு. தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். இது முதல் தமிழ் பதிவாகியதால் நான் முன் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு தமிழ் கதையையே சில மாற்றத்தோடு மறுபடியும் எழுதி இருக்கேன். படிக்காதவங்க மறுபடியும் படியுங்க, படிச்சவங்க இன்னொறு முறை படிக்கலாமே.....)
என்னங்க விஜய் டிவிய காப்பி அடிச்சு சன் டிவியில அசத்த போவது யாருனு ஒரு நிகழ்ச்சி வருதாமே?
ஆமா ஆமா நானும் கேள்வி பட்டேன், எப்படி இருக்குனு நாளைக்கு பாத்து உனக்கு சொல்றேன்டி...
என்னங்க என்னங்க, என்னையும் நாளைக்கு கூட்டிட்டு போங்க பிளீஸ்...நீங்க மட்டும் அந்த வீட்டுக்கு தினமும் போய் விஜய் டிவி பார்த்துட்டு வாரிங்க, நாளைக்கு ஒரு நாள் ஆச்சும் எங்களை கூட்டிட்டு போங்க பிளீஸ்..
அய்யோ வேற வினையே வேண்டாம், நானே கஷ்ட்டபட்டு அந்த வீட்டுக்கு போய் இருந்து பார்த்துட்டு வரேன், நான் பார்த்து ரசிச்சத உங்ககிட்ட பகிர்ந்துகிரேன், அப்படியே இருந்துட்டு போகட்டும்…
ச்சே....என்ன கெட்ட எண்ணம் உங்களுக்கு, தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்னு சொல்வாங்க, ஆனா நீங்களோ ரொம்ப சுய நலமா இருக்கிங்க, நீங்க மட்டும் தினமும் அந்த வீட்டுல போய் டிவி பார்கலாம், நாங்க மட்டும் வர கூடாது..
அடியே சொன்னா புரிந்துகோடி, நானே அந்த வீட்டுக்கு வேண்டாத விருந்தாலி, வேண்டா வெறுப்போட தான் என்கிட்டயே நடந்துப்பாங்க, எவ்வளவுதரம் அவங்ககிட்ட அடிபட்டு இருக்கேனு உனக்கு தெரியுமா.. அப்படி இருந்தும் வெக்கம் இல்லாம அவங்க வீட்டுக்கு மருபடியும் போறேன்... எதுக்காக எல்லாம் உங்களுக்காக... இது எல்லாம் உன்கிட்ட சொன்னா உன் மனசு கஷ்ட படும்னு தான் உன்கிட்ட அதை எல்லாம் சொல்றது இல்லை…
என்னது.. அடிபட்டு இருக்கீங்களா, என்னங்க சொல்றீங்க…
அதை எல்லாம் விடு பிள்ளை, நம்ப பசங்க எங்க… ?
அப்பா...அப்பா....
வாங்கடா என் செல்வங்களா, எங்கடா ஆளையே காணுமேனு பார்த்தேன்…பிரண்ட்ஸ் கூட விளையாடிட்டு வரோம்பா… ஏதோ மைய் டியர் பூதம்னு ஒரு சீரியல் வருதாமே.. அதை பார்க்க அவங்க போய்டாங்க, அதனால நாங்க வீட்டுக்கு திரும்பி வந்துடோம்…. அப்பா அப்பா, எனக்கும் அந்த சீரியல் பார்கணும்பா, பீள்ஸ்பா…
என்னங்க, குழந்தை ஆசை படுதுல, நாளைக்கு இவணுகளையும் கூட்டிட்டு போய் பூதம் கீதம்னு ஏதோ சொல்ராங்களே, அதையும் காட்டிட்டு தான் வாங்கலேன்..
அடியே, அந்த சீரியல் சாயங்காலமே வந்துடும், அவ்வளவு சீக்கிறம் அந்த வீட்டுக்கு போனா நம்பளை ஒலிச்சு கட்டிடுவாங்க.. ஆளை விடு சாமி…
ஏங்க இது உங்களுக்கே நியாயமா இருக்கா? இந்த தெருவுலயே ஒரே ஒரு வீட்டுல தான் டிவி இருக்கு, அ ந்த வீட்டுக்கும் எங்களை கண்டிப்பா போக கூடாதுனு சொல்லிடிங்க... ஆனா நீங்க மட்டும் தினமும் அந்த வீட்டுக்கு போய் அரசி பார்த்துட்டு எனக்கு வந்து கதை சொல்றீங்க... அதே போல நாளைக்கு நம்ப பசங்களுக்காக கொஞ்சம் வெல்லன போய் இந்த பூத கதையும் பார்த்துட்டு வந்து இவணுகளுக்கு சொல்லுங்களேன்…
உங்களுக்கு சொன்னா புரியாது, நான் போகமாடேனா போகமாடேன் தான்… இப்பொ போய் வேற வேலை இருந்தா பாருங்க…
………
டேய்.. இப்ப என்ன சொல்லிடேனு இப்படி மூஞ்ஜிய தூக்கி வெச்சிட்டு இருக்கிங்க, உங்க ரெண்டு பேர்க்காக தானேடா நான் உழைக்கிரேன்..,
………
சரி நாளைக்கு நான் போய் அந்த மைய் டியர் பூதம் சீரியல பார்த்துட்டு வரேன் போதுமா… இப்போவாது கொஞ்ம் சிரியுங்கலேடா பிளீஸ்…
அய்யா அய்யா, அப்பான அப்பா தான்…
(அடுத்த நாள்)
என்னங்க வெளில போரதுக்கு முன்னாடி ஏதாவது குடிச்சிட்டு போங்க… ..
இல்லை இல்லை நான் அந்த வீட்டுக்கு போயே குடிச்சுகிரேன்…
என்னங்க... என் மேல கோபமா….
பெருசா கோபம்லா இல்லடி.. கொஞ்ம் வருத்தம் தான்…
என்னது என் ராசாவுக்கு வருத்தமா....
ஆமான்டி எந்த ஜென்மத்தில் பண்ணின பாவமோ இப்படி நம்ம கஷ்ட பட வேண்டி இருக்கு, தினமும் இப்படி செத்து செத்து பொழைக்க வேண்டி இருக்கு.. ஏதோ என்னால முடிந்த அளவுக்கு உங்கள எல்லாம் கொஞ்ம் சந்தோசமா வெச்சிகறதுக்கு முயற்சி பன்ரேன்… இந்த நேரத்துல நான் அங்க போனதே இல்லை, என்ன நடக்குமோனு பயமா வேர இருக்கு....
அது எல்லாம் பயப்படுற மாதிரி ஒன்னும் நடக்காது கவலைய விடுங்க....
என் செல்லம் சொன்னா சரி தான்...
அப்படியே அரசி பார்த்துட்டு சீக்கிரம் வாங்க, இன்னிக்கு உங்களுக்காக சுட சுட கோழி சூப் பண்ணி வைக்கலாம்னு இருக்கேன்...
அட, என்னடி இன்னிக்கு விசேஷம்....
அது எல்லாம் ஒன்னும் இல்லைங்க, நம்ப பசங்க தான் நேத்திகே சொன்னாங்கல விளையாட யாரும் வரலைனு.. அதான் வீட்டுலயே வேட்டையாட வேலையாட ஒரு தங்கச்சி பாப்பா இருந்தா… அவங்க பாட்டுக்கு இங்கயே ஜாலியா விளையாடிட்டு இருக்க மாட்டாங்க.. அதான் இன்னிக்கு.…
ஆமா ஆமா.. நீ சொல்றதும் சரி தான்………… என்ன..என்ன, நீ இப்போ என்ன சொன்ன..
இல்லையே நான் ஒன்னும் சொல்லலையே....
இல்லை இல்லை, நீ இப்போ என்னவோ சொன்ன....
சீ போங்க, வெட்கமா இருக்கு…
ஆகா... என் செல்லத்துக்கு வெக்கத்த பாரு...அடியேய்... என்னடி இப்போவே எனக்கு மூடை கிளப்பி விட்டுட்ட....நான் இன்னிக்கு எங்கையும் போகலை… சார் இன்னிக்கு லீவு...
சீ.. போங்க....பசங்க அப்புறம் வருத்தப் படுவாங்க... நீங்க போய் பூதத்தை பார்த்துட்டு அப்படியே அரசியையும் பார்த்துட்டு வாங்க, நான் உங்களுக்காக காத்துகிட்டு இருபேன்…
சரி சரி போரேன்… போரதுக்கு முன்னாடி வாய் நம நமகுது.... ஏதாவது குடேன்…
........
“வெள்ளைக்காரன் முத்தம் என் தேகம் எங்கும்….”
என்னடா இது சன் டிவி போடுவாங்கனு பார்தா கே டிவில பாட்டு ஓடுதே.. நம்ப மூடுக்கு சரியான பாட்டு தான் ஆனா பசங்களுக்கு என்ன பதில் சொல்றது அப்புறம்…
டேய் வெங்கட் சன் டிவி போடுடா, மைய் டியர் பூதம் பார்போம்.. .
அய்யோ அம்மா, இந்த வயசுல உனக்கு பூதம் கேக்குதா… கலி காலம்டா சாமி…
டேய் அப்படியே அந்த கொசு வத்திய ஏத்தி வை, மணி 6 ஆனா போதும், காது கிட்ட வந்து கொய்யினு...... எங்க இருந்து தான் வருதோ தினமும் தெரியல…
நல்ல வேலை, சன் டிவி போடாணுங்கப்பா… ஆமா.. ஏதோ ஒரு வாசனை வருதே… மயக்கமா வேர இருக்கு… அய்யோ.. மூச்சு வேர விட முடியலையே…
அப்பா சாகும் தருவாயில் சொன்னது யாபகம் வந்தது… “டேய் அந்த கோடில இருக்கிற வீட்டுக்கு மட்டும் நைட் 9 மணிக்கு முன்னாடி போகாத.. அந்த வீட்டுல மட்டும் தான் சாயங்காலம் 6 மணி ஆனா நம்பல கொல்றதுக்கு ஏதோ செய்வினை வெச்சி இருக்காங்க, மத்த வீட்டுல எல்லாம் ஒரு பிராப்பளமும் இல்லை....எல்லாம் குடிசை வீடு தான்” .....
அய்யோ...பெரியவங்க சொன்னதை மறந்து போய்டேனே....இந்த சம்சார பந்தத்துல மதி கெட்டு போனேனே…அய்யோ என்னோட செல்லம் எனக்காக இரவு முழுவதும் காத்துகிட்டு இருக்குமே… செல்லம்… என் செல்லம்... நீயும் நான் பண்ணிய தப்பை நாளைக்கு பண்ணிடாதே.....செல்ல…செல்...
“கொசுவை ஒளிப்போம், சிக்கன் குனியாவை அளிப்போம்” என்று டிவி அலறியது...
(நான் தமிழில் எழுத ஊக்கம் கொடுத்த அம்பி மற்றும் ஜீ அவர்களுக்கு நன்றி)